Wednesday, February 6, 2008

ரூபாய் ஒரு கோடி வரை அபராதம் - தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000

குப்புசாமிக்கு நெஞ்சுவலி வராத குறை தான். ஒரே கவலை. அவருடைய கடன் அட்டை வங்கி அவருக்கு ரூபாய் 1,00,000 த்துக்கான பில்லை அனுப்பியுள்ளது. அவர் ரூபாய் 100 க்கான ஏர்டெக்கான் முன்பதிவு செய்ததை தவிர்த்து வேறு எதுவும் வாங்கவில்லை. அவர், அவருடைய தெருவில் உள்ள ஒரு இணையதள மேயும் மையத்திற்கு (Internet Browsing Center) சென்று அவரின் கடன் அட்டையை பயன் படுத்தி www.airdeccan.net -ல் முன் பதிவு செய்தார். அந்த மைய மேலாளர், தட்டச்சு பதிவு (Key Logger) மென்பொருள் கொண்டு அவருடைய கடன் அட்டையின் தகவல்களை சேகரித்து, அதை பயன்படுத்தி பலவற்றையும் வாங்கி மோசடி செய்து விடுகிறார்.

பாவம் குப்புசாமி. என்ன செய்வார்? யாரை நாடுவார்? எப்படி இந்த மோசடியை நிரூபிப்பது? எந்த சட்டம் கொண்டு வழக்கு பதிவது?

இப்பொழுது எந்த சட்டம் கொண்டு நீங்கள் குற்றவாளியை தண்டிப்பீர்கள்? அதற்கு தான் இந்த தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000....
தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000 , அதன் உட்பிரிவான தகவல் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஆக்கிரமிப்பளர்களுக்கு ( Hackers) தரப் படும் தண்டனைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிப்பு.

எப்போதாவது முழுவதுமாக, வெளிநடப்பு இல்லாமல் நடைபெறும் பாரளுமன்ற கூட்டத்தில், சில நேரம் சில உருப்படியான சட்டங்களையும் உருவாக்கி விடுவார்கள். அந்த வகையில் ஒரு முக்கியமான சட்டம் - தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000. பொதுவாக நமக்கு சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு. இந்த சட்டமும் அதற்கு விதி விலக்கு அல்ல. அந்த குறையை சிறிதளவேனும் போக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையில் இந்த முதல் கட்டுரை.

தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000 - ஒரு அறிமுகம்

இந்த சட்டம், மின்னணு தகவல் பரிமாற்றம் மற்றும் இதர மின்னணு தொலை தொடர்பியலின் மூலம் நடைபெறும் கணக்கு வழக்கிற்கு ஒரு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காகவும், பொதுவாக காகிதங்களை (எழுத்து மூலமான) அடிப்படையாக கொண்ட தகவல் பரிமாற்றத்திற்குப் பதிலாக, மின்னணு சம்பந்தப் பட்ட காகிதம் இல்லாத தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் சேமிப்பை அடிப்படையாகக் கொண்ட "மின்னணு வணிகம்" ("electronic commerce") முறையில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளிடம் கோப்புகளை பதிவு செய்ய வழிவகை செய்யும் பொருட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சிறிது மாற்றம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டமே தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000. இது மேலும் பிற சட்டங்களான வங்கி, வணிகம், குற்றவியல் மற்றும் பிற சட்டங்களுடன் தொடர்பு கொண்டது.
அதில் ஒரு பிரிவு, தகவல் பாதுகாப்பு பற்றியது...

THE INFORMATION TECHNOLOGY ACT, 2000
ACT NO. 21 OF 2000 [9th June, 2000.]
CHAPTER IX
PENALTIES AND ADJUDICATION
43.Penalty for damage to computer, computer system, etc.

43. கண்ணி மற்றும் கணிணி சார்ந்த இதர அமைப்பிற்கு(இயந்திரத்திற்கு) கேடு விளைவிப்பவர்க்கு தரும் தண்டனை.
கணிணி அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்பிற்கு அதனுடைய உரிமையாளர் அல்லது பொருப்பாளருடைய அனுமதி இல்லாமல் கீழ்கண்ட செயல்களை செய்பவர் இந்த சட்டத்தின் படி குற்றவாளி ஆகிறார்.

அ) கணிணி அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்பினை உபயோகித்தல் அல்லது உபயோகிப்பதை தடை செய்தல்
ஆ) கணிணி தகவல் அமைப்பு அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்பில் உள்ள தகவல்களை, அல்லது கணிணியுடன் இணைத்துக் கொள்ள கூடிய தகவல் சேகரிப்பு கருவியில் உள்ள தகவல்களை பதிவிரக்கம், படிஎடுத்தல் அல்லது தகவலை வெளிக்கொணர்தல்
இ) கணிணி அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்பில் அதற்கு தீங்கு விளைவிக்க கூடிய கட்டளைகளை கொண்ட புரோகிராம் அல்லது வைரஸை கொண்டுவருதல் அல்லது கொண்டுவருவதற்கு வழிவகை செய்தல்
ஈ) கணிணி அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்பு, தகவல், தகவலமைப்பு, அதில் நிலை நிறுத்தப் பட்டுள்ள மென்பொருள்களுக்கு கேடு விளைவித்தல் அல்லது கேடு விளைய காரணமாயிருத்தல்
உ) கணிணி அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்புக்கு தடை(கோளாறு) ஏற்படுத்துதல் அல்லது தடை ஏற்பட காரணமாயிருத்தல்
ஊ) அனுமதிக்கப் பட்ட பயனீட்டாளர்களை கணிணி அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்பினை பயன்படுத்த முடியாமல் செய்வது அல்லது பயன்படுத்தமுடியாமல் போவதற்கு காரணமாயிருத்தல்.
எ) இந்த சட்டத்தில் சொல்லியுள்ள குற்றங்களை வேரு யாரேனும் புரிவதற்கு உதவியாய் இருத்தல்
ஏ) கணிணி அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்பில் மாற்றம் செய்து அதன் மூலம் ஒரு பயனீட்டளர் கட்ட வேண்டிய பணத்தினை மற்றொரு பயனீட்டாளரின் கணக்கில் மாற்றுதல்...

தண்டனை::

மேற் சொன்ன குற்றங்களை குற்றவாளியின் மீது நிரூபிக்கும் பட்சத்தில், குற்றவாளி பாதிக்கப் பட்டவர்க்கு இழப்பீடாக ரூபாய் ஒரு கோடிக்கு மிகாமல் தர வேண்டியது வரும். இழப்பீட்டுப் பணம் குற்றத்தின் தன்மை மற்றும் அதன் விளைவினைப் பொருத்து முடிவு செய்யப் படலாம். மேலும் குற்றத்தின் தன்மையை பொருத்து வேறு சட்டங்களின் மூலமும் தண்டனை வழங்கப் படலாம்.


இந்த கட்டுரையில் ஏதேனும் குறை இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்... மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
சில முக்கிய தகவல்கள்.


The address of the Cyber Crime Cell:
Cyber Crime Cell,Crime Branch CID.,Admiralty House,Government Estate,Chennai - 600 002.Tamil Nadu.
Website : www.cbcid.tn.gov.inEmail ID : cbcyber@tn.nic.inTelephone Nos. : 044-25389779, 044-25393359, Mobile : 98414-22844

Explanation.-For the purposes of this section,-

1) ‘‘computer contaminant’’ means any set of computer instructions that are designed-
2) To modify, destroy, record, transmit data or programme residing within a computer, computer system or computer network; or
3) By any means to usurp the normal operation of the computer, computer system, or computer network;
a) ‘‘computer data base'' means a representation of information,
b) Knowledge, facts, concepts or instructions in text, image, audio, video that are being prepared or have been prepared in a formalized manner or have been produced by a computer, computer system or computer network and are intended for use in a computer, computer system or computer network;
c) ‘‘Computer virus'' means any computer instruction, information, data or programme that destroys, damages, degrades or adversely affects the performance of a computer resource or attaches itself to another computer resource and operates when a programme, data or instruction is executed or some other event takes place in that computer resource;
d) ‘‘Damage’’ means to destroy, alter, delete, add, modify or rearrange any computer resource by any means.

1 comment:

வடுவூர் குமார் said...

நல்ல விபரங்கள்...
நன்றி