Tuesday, February 26, 2008

"ஜோம்பிஸ்" - ஆப்படிக்கும் ஆக்கிறமிப்பாளர்கள்! எச்சரிக்கை தேவை...

பொதுவா, ஒரு ஆக்கிறமிப்பாளர அவர் உபயோகப்படுத்திய ஐபி (IP)-ய வச்சு தான் கண்டுபிடிக்க முடியும். நீங்க உங்க கணிணியிலிருந்து மற்ற கணிணியோட தொடர்பு கொள்ளும் போது, உங்க ஐபி(IP) பல இடங்கள்ல (உங்க லோக்கல் ஐஎஸ்பி(ISP)முதல் சர்வர் வரை) பதிவு செய்யப்படும். நீங்க ஏதாவது தப்பு பண்ணுனா, இந்த ஐபி(IP)-ய வச்சு உங்கள மோப்ப நாய் வந்து கவ்வி புடிக்கிற மாதிரி கொத்தா அள்ளிருவாங்க. உதாரணத்திற்கு கீழே உள்ள சமீபத்திய கேஸ் ஒன்னு படிங்க. இதுல இருந்து தப்பிகிற விதமா, துப்பறிவாளர்களுக்கு ஆப்படிக்கும் விதமா ஆக்கிறமிப்பாளர்கள் பயன்படுத்தும் ஒரு வழி தான் "ஜோம்பிஸ்"... விளக்கமா பார்க்கலாம்.

சமீபத்திய கேஸ்: http://inhome.rediff.com/money/2007/dec/15hacker.htm
December 15, 2007 14:10 IST

In a major breakthrough, Karnataka's Cyber Crime police of the Corps of Detectives arrested seven people, who allegedly hacked various bank accounts on Internet and siphoned off close to Rs 12 lakhs (Rs 1.2 million).

The police tracked the accused by tracing the IP address of the PC from where the accounts were hacked.

"ஜோம்பிஸ்" - ஆக்கிறமிப்பாளர் இப்ப இந்தியாவுல ஒரு வங்கியோட சர்வர தாக்கி, அதுல இருக்கற மற்றவர்களோட கணக்கு விவரங்கள எடுத்துக்கணும். அதனை பயன்படுத்தி மற்றவர்களோட கணக்குல இருக்குற பணத்த அவரோட கணக்குக்கு மாத்திக்கணும். இப்ப அவர் தன் வீட்டுல இருந்து தாக்குதல நடத்துனா மாட்டிக்குவார். அதனால ஆக்கிறமிப்பாளர், குப்புசாமியோட கணிணியில ஒரு கெட்ட மென் பொருள நிலைநிறுத்தி, அதனை தன் வசப்படுத்திக்குவார். அப்புறம் சாகவாசமா குப்புசாமியோட கணிணியிலருந்து தாக்குதலை தொடங்குவார். இந்த முறையில ஆக்கிறமிப்பாளர் வசப்படுத்தப்பட்ட குப்புசாமியோட கணிணிக்கு "ஜோம்பி கணிணி" ன்னு பேரு. ஆக்கிறமிப்பாளர் கொஞ்ச தெளிவா இருந்தார்ன, குப்புசாமியோட கணிணியிலிருந்து வடுவூர் குமார் கணிணிக்கு போய், அங்கிருந்து தமிழச்சி கணிணிக்கு போய், அங்கிருந்து ஓசை செல்லா கணிணிக்கு போய், அங்கிருந்து தாக்குதலை தொடங்குவார்.

பல நாடு சம்பந்தப் பட்டு இருப்பதனால், ஆக்கிரமிப்பாளரை அவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியாது. ஓசை செல்லாவோட கணிணியின் ஐபி(IP)பதிவுகளை (Log) வாங்கிறலாம். ஆனா அவருடைய கணிணிய மூன்றாம் கட்ட ஜோம்பியா பயன் படுத்திய, இரண்டாம் கட்ட ஜோம்பி கணிணியான தமிழச்சியியோட கணிணியின் பதிவுகளை ஐபி(IP)பதிவுகளை (Log)அவ்வளவு சீக்கிரம் வாங்க முடியாது. அதற்கு பிரான்சு நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் வேண்டும்.

நீங்க இதெல்லாம் கண்டுபிடித்து வருவதற்குள்ளாக,ஆக்கிறமிப்பாளர் வங்கி பணத்தையெல்லாம் ஏப்பம் விட்டு துபாய் போயிருப்பார்.

என்னது இது,,, விட்டலாச்சார்யா படம் மாதிரி இருக்குன்னு நினைக்கிறீங்களா? எனது அடுத்த பதிவில், இது எவ்வளவு எளிதானது என்பதையும், எப்படி செயல் படுத்தப் படுகின்றது என்பதையும் விளக்குரேன்.

குறிப்பு - இங்கு குறிக்கப் பட்டுள்ள அறிமுகமான பெயர்கள், ஒரு உதாரணத்திற்காகவே... "யாதும் ஊரே. யாவரும் கேளிர்"

3 comments:

வவ்வால் said...

ஜோம்பி கணினி பற்றி நீங்கள் சொன்னதை நான் வேறு விதமாக முன்னர் படித்துள்ளேன். இப்போது இதுவும் ஒரு விதமாக புரிகிறது, இதில் ஒரு சந்தேகம்,

உதாரணமாக வேறு டைம் சோனில் இருப்பவர்கள் அந்த நேரத்தில் இணையத்தில் இருந்தால் மட்டுமே இப்படி மாற்றி , இங்கிருந்து அங்கு என ஹாப் செய்து ஒரு தளத்தில் போய் வேண்டாத வேலை செய்ய முடியும்.

உ.ம்: இந்தியாவில் இருந்து திருடப்பார்க்கும் ஒருவர் , இந்திய கணினியை ஜோம்பி ஆக்கி செயல்படுவது சாத்தியம், ஆனால் பிரான்ஸ், அமெரிக்க கணினியை ஜோம்பி ஆக்கினால் அந்த நேரத்தில் அவரும் இணையம் வந்திருக்க வேண்டுமே வரவில்லை எனில் "லின்க்" இருக்காதே.(பியர் ஷேர், லைம் வயர், போன்ற ftp , p2p கிளையண் மூலம் டவுண் லோட் செய்யும் போது "no seeds" வருவதைப்பார்த்திருப்பீர்கள்)

மேலும் இப்போதெல்லாம் இணைய வழி வங்கி சேவை செய்யும் போது , ஒரே ஐ.பி இல் இருந்து மட்டும் இயக்கினால் மட்டும் இயங்கக்கூடிய வகை கணக்கையும் நாம் தெரிவு செய்துக்கொள்ள முடியும் என்று கேள்விப்பட்டேன்.

அப்படி செய்தால் நாம் எங்கிருந்தாலும், நமது கணினி, இணையம் வழி சென்று மட்டுமே வங்கி கணக்கை செயல்ப்படுத்த முடியும்(இங்கே mac address கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், எனவே i.p spoof கூட தடுக்கப்படும்), பெரிய அளவுக்கு தொகைகளை இணையத்தில் கைஆள்பவர்கள் இதனை செய்வதாக முன்னர் ஒரு கட்டுரையில் படித்தேன்.

கொஞ்சம் அனுபவம் இருந்தாலே போதும் நம்மை இன்னொருவர் ஜோம்பியாக பயன்படுத்துவதை கண்டு பிடித்து விட முடியும்.

Unknown said...

Nice one, i am waiting for next one...

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

நண்பர் வவ்வால், எனது கருத்துக்களை http://itsecurityintamil.blogspot.com/2008/02/zombies.html படித்து பார்த்து, உங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

நண்பர் நெல்லை காந்த் - நன்றி. இந்த வார இறுதியில் அடுத்த பதிவு இருக்கும்...