Wednesday, February 6, 2008

தீவிரவாதிகளின் ரகசிய தகவல் பரிமாற்றம் (டெட் ட்ராப்ஸ்) - அம்பலம்

கொஞ்ச நாளைக்கு நம்ப இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பல அரபு நாடுகளில் யாஹூ குரூப் "Yahoo group" - தடை பண்ணுணது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

ஏன் யாஹூ குரூப் "Yahoo group" தடை பண்ணுனாங்களா? தீவிரவாதிகளுக்கு தகவல் பரிமாற்றம் ரொம்ப அவசியங்க. முன்னாடி எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு போன் பண்ணிதான் சொல்வாங்க. அதை காவல்துறை/இராணுவம் ரொம்ப சுலபமா கண்டுபிடிச்சாங்க..அதுக்கு அப்புறம், இணைய சேவை வந்ததும் ரொம்ப சுலபமா தகவல் பரிமாற்றம் நடந்தது. தீவிரவாதிகள், யாஹூ குரூப் "Yahoo group" மாதிரி இருக்குற இலவச வசதிகளை கொண்டு ஒரு குரூப் ஆரம்பிக்க வேண்டியது. வேறு வேற இடங்களில் இருக்கும் தீவிரவாத குழுவினர் அந்த குரூப்பில் உறுப்பினராக சேர்ந்து கொண்டு தகவலை பெற்றுக் கொண்டனர்.

இதனை கண்டுபிடித்த அரசு, அந்த இணையதளங்களை தடை செய்துட்டாங்க...
இத்தகைய இணைய இ-மெயில் மற்றும் குரூப்புகளின் நடவடிக்கைகளை FBI முதற் கொண்டு அனைத்து நாட்டு அரசாங்களும் கண்கானிக்க தொடங்கின.

"எத்தனுக்கு எத்தன் வையகத்தில் உண்டு" ங்கிறது நம்மூருல சொல்றது தாங்க... அதைப்போல, தீவிரவாதிகள் இன்னொரு சுலபமான முறைய கண்டு பிடிசிருக்காங்க. "யோக்கியனுக்கு ஒரு வழி... அயோக்கியனுக்கு ஆயிரம் வழி..." ங்கிறது மாதிரி, எல்லா கண்காணிப்புகளையும் தாண்டி இப்பொழுது ஒரு வழி கண்டுபிடிசிருக்காங்க... அது தான் "டெட் ட்ராப்".

இ-மெயிலை ஒருவர் இன்னொருவருக்கு அனுப்பும் போது தான், அதனை ஸ்கேன் செய்து அதன் தகவலை ஆய்வு செய்து, தீவிரவாதிகளின் தகவல் பரிமாற்றத்தை கண்கானிக்க முடியும்.
ஆனால் இப்பொழுதெல்லாம், தீவிரவாதிகள் ஒரு இ-மெயில் கணக்கை துவக்குவார்..(உதாரணத்திற்கு ஒரு யாஹூ இ-மெயில் ID). அதன் பின்னர் அந்த இ-மெயிலின் பயனீட்டாளர் பெயர் (UserName) மற்றுக் கடவு சொல்லை (password) பரிமாறிக் கொள்வர். பின்னர், ஒரு தீவிரவாதி , என்ன செய்தியை மற்றவர்களிட்ம் சொல்ல வேண்டுமோ, அதனை ஒரு இ-மெயிலில் தட்டு அச்சு (Typing) செய்து ட்ராஃப்ட்டாக (Draft) சேமித்து வைத்து விடுவார். மற்ற தீவிரவாதிகள் அந்த இ-மெயிலில் உள்நுழைந்து (Login) சேமித்து வைத்திருக்கும் செய்தியை படித்து விட்டு, புதிய செய்திகளை சேமித்து வைத்து விடுவார்கள். மொத்தத்தில் தகவல் பரிமாற்றம் என்பது, இ-மெயிலை அனுப்பாமலேயே நடக்கும். இதனை, இப்பொழுது இருக்கும் தொழில் நுட்ப வசதிகளை வைத்து FBIயினாலும் கூட கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்லவே. It is virtually impossible.

என்ன கொடுமை சரவணன் இது? ஒரு இ-மெயிலுக்கு பின்னாடி இத்தணை விசயமா?

பட்டுக்கோட்டை சொன்னது நினைவிற்கு வருதா " திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது". இது தீவிரவாததிற்கும், வன்முறைக்கும் பொருந்தும்...


உங்களுக்கு இன்னும் கொஞ்சம் தெரியனுமா -- http://www.policeone.com/writers/columnists/RaymondFoster/articles/135924/

3 comments:

Osai Chella said...

அருமையாக எழுதுகிறீர்கள் நண்பரே.. இதே பாணியில் எழுதவும்!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

interesting மற்றும் உபயோகமான பதிவு.

வடுவூர் குமார் said...

இதைப் படிச்சி இன்னும் நாலு பேர் இதே மாதிரி செய்யாம இருக்கனுமே என்று கவலையாக இருக்கு.